News June 4, 2024
ஆந்திர அமைச்சர் ரோஜா தோல்வி

ஆந்திர சட்டசபை தேர்தலில் YSR காங்கிரஸ் கட்சியின் முக்கிய வேட்பாளர்களில் ஒருவரான அமைச்சர் ரோஜா தோல்வியடைந்துள்ளார். நகரி தொகுதியில் போட்டியிட்ட அவர் தெலுங்கு தேச கட்சி வேட்பாளர் காலி பானு பிரகாஷிடம் தோல்வியைத் தழுவி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். சொந்தக் கட்சிக்காரர்களே தனது தொகுதியில் சரியாக பணியாற்றவில்லை என்பது ரோஜாவின் குற்றச்சாட்டாக உள்ளது.
Similar News
News March 10, 2026
CINEMA 360: ஒரே வீச்சில் ‘சேயோன்’

*‘சேயோன்’ படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரலில் தொடங்கி ஒரே கட்டமாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம் *ரஜினி எழுதி வரும் அவரின் சுயசரிதை புத்தகம் இந்த ஆண்டிற்குள் வெளியாகுமாம் *‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்தில், தனுஷுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்க உள்ளார் என டாக் *‘உறியடி’ விஜயகுமார் நடிக்கும் ‘அறிவு’ படத்தில் பிக்பாஸ் சுபிக்ஷா முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
News March 10, 2026
உக்ரைனிடம் உதவி கேட்ட அமெரிக்கா

கடந்தாண்டு ஏவுகணைகள் கேட்ட ஜெலன்ஸ்கியை டிரம்ப் வெளிப்படையாக விமர்சித்து உதாசீனப்படுத்தினார். ஆனால் தற்போது, ஈரானின் Shahed ட்ரோன்களை சமாளிக்க முடியாமல் உக்ரைனின் உதவியை நாடியுள்ளார். மில்லியன் கணக்கில் செலவழித்து ஓய்ந்துபோன அமெரிக்கா, தற்போது ட்ரோன்களை எதிர்கொள்ளும் அனுபவம் கொண்ட உக்ரைனிடம் சென்றுள்ளது. ஒரு வருடத்திற்கு முன் உதவி கேட்ட நாடு, இன்று உதவி வழங்கும் நிலையில் உள்ளது.
News March 10, 2026
FLASH: விலை ₹65,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

மார்ச் மாத சலுகையாக Skoda நிறுவனம் தனது கார்களின் விலையை குறைத்துள்ளது. அந்நிறுவனம் பல்வேறு மாடல் காருக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. கார் வாங்கும் எண்ணத்தில் உள்ளவர்களுக்கு இது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. எந்தெந்த மாடல் காருக்கு எவ்வளவு சலுகை என்பதை மேலே உள்ள போட்டோஸை இடது பக்கமாக SWIPE செய்து பாருங்க.


