News June 4, 2024
பலன் தராத அண்ணாமலையின் நடைபயணம்

‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்டார் அண்ணாமலை. பாஜகவை வளர்க்கும் நோக்கில் நடைபயணம் மேற்கொண்ட போதிலும், அதனை வாக்குகளாக அவரால் அறுவடை செய்ய இயலவில்லை என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து. தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெல்ல முடியாத நிலை உள்ளது. திமுக மீதான அவரது விமர்சனங்களும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே தெரிகிறது.
Similar News
News December 3, 2025
கூட்டணிக்கு Plan B-ஐ கையில் வைத்திருக்கிறதா காங்கிரஸ்?

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது காங்கிரஸ். இதனால் ஆளும் தரப்பும் ஆசுவாசமானது. ஆனால், திமுகவுக்கு தெரியாமல் தவெகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி சீக்ரெட்டாக காங்., ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக அறிவிக்கப்படாத அணி ஒன்று தீவிரமாக இயங்கி வருகிறதாம். கேட்கும் சீட்டை கொடுக்கவில்லை எனில் மீண்டும் கூட்டணியில் குழப்பம் வெடிக்கலாம் என பேசப்படுகிறது.

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹160 உயர்வு

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ₹240 குறைந்திருந்த நிலையில், இன்று(டிச.3) சவரனுக்கு ₹160 உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹20 உயர்ந்து ₹12,060-க்கும், சவரன் ₹96,480-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) 20.79 டாலர்கள் குறைந்து 4,220 டாலர்களாக விற்பனையாகிறது. ஆனாலும், இந்திய சந்தையில் தங்கம் விலை இன்று உயர்வைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.