News June 4, 2024
தஞ்சாவூரில் திமுக தொடர்ந்து முன்னிலை

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 14வது சுற்றுகள் முடிவடைந்த நிலையில் திமுக முன்னிலையில் உள்ளது. திமுக- 3,41,784, தேமுதிக- 1,27,794 பாஜக- 1,14,788, நாத – 82,029, 2,13,990 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முரசொலி முன்னிலையில் உள்ளார்.
Similar News
News March 7, 2026
தஞ்சாவூர்: 34 பேரிடம் ரூ.1.50 கோடி மோசடி!

தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் கும்பகோணம் பகுதிகளில், சமூக வலைதளங்கள் மூலம் ஆன்லைன் டிரேடிங் மற்றும் பகுதிநேர வேலை என ஆசை காட்டி 34 பேரிடம் சுமார் ரூ.1.50 கோடி மோசடி நடந்துள்ளது. இதில் ஆசிரியர்கள், விவசாயிகள், தனியார் ஊழியர்கள் எனப் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் புகாரை அடுத்து, தஞ்சாவூர் சைபர் க்ரைம் காவல்துறையினர் 34 வழக்குகள் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 7, 2026
தஞ்சாவூர் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்!

தஞ்சாவூர் கொடிமரத்து மூலை பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் நடைபெற உள்ளதால், வரும் மார்ச் 9-ம் தேதி முதல், கும்பகோணம் – திருவையாறில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கீழவாசல் வழியாக செல்ல வேண்டும். இதேபோல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் மேலவீதி, பழைய திருவையாறு சாலை வழியாக செல்ல வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
News March 7, 2026
தஞ்சை: விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் கரும்பு அரவை நடைபெற்று வருகிறது. நடப்பு அரவைப்பருவத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பரப்பிலிருந்து 1,45,000 மெ.டன்கள் அரவை செய்ய திட்டமிடப்பட்டு 4-ம் தேதி வரை 1,11,368 மெ.டன்கள் அரவை செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆலை அரவை 12-ம் தேதி நிறைவு செய்ய உள்ளதால் ஆலைக்கு பதிவு செய்து, விவசாயிகள் கரும்புகளை விரைந்து அனுப்ப ஆட்சியர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.


