News June 4, 2024
திருச்சி தொகுதி நிலவரம்

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்குகள் இன்று மாலை 4மணி நேர நிலவரப்படி, 14-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில், திமுக கூட்டணி சார்பில் மதிமுக – துரை வைகோ – 372733, அதிமுக – கருப்பையா – 153527, அமமுக – செந்தில்நாதன் – 72627, நா.த.க – ராஜேஷ் – 70674, 2,19,206 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலையில் நீடித்து வருகிறார்.
Similar News
News August 27, 2025
திருச்சி: 1,317 பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் இத்திட்டம் விரிவு படுத்தப்பட்டதன் மூலம் மொத்தம் 1,317 பள்ளிகளில் 80,129 மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 27, 2025
திருச்சி: வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

வேளாங்கண்ணி ஆலய திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாஸ்கோடகாமா – வேளாங்கண்ணி சிறப்பு ரயிலானது ஆக.27 மற்றும் செப்.1, 6 ஆகிய தேதிகளில் திருச்சி வழியாக இயக்கப்பட உள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 27, 2025
இருங்களூர்: உயர்வுக்கு படி முகாம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் 2024-25 கல்வியாண்டில் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அனைவரும் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “உயர்வுக்கு படி முகாம்” இருங்களூர் எஸ்.ஆர்.எம் கல்வி வளாக கூட்ட அரங்கில் ஆக.28 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.