News June 4, 2024
ஹெச்.டி. குமாரசாமி வெற்றி

கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் முன்னாள் முதல்வரும், மஜத தலைவருமான ஹெச்.டி. குமாரசாமி போட்டியிட்டார். அவருக்கு 8,51,881 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெங்கடரமண கவுடா 5,67,261 வாக்குகளை மட்டுமே பெற்றார். இதனால் குமாரசாமி 2,84,620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Similar News
News August 7, 2025
அஜித்துடன் கைகோர்த்த நரேன் கார்த்திகேயன்

அஜித்குமார் ரேஸிங் கார் பந்தய நிறுவனத்தில் தமிழரான நரேன் கார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நரேன் தங்களது அணியில் இணைவது பாக்கியம் என அந்நிறுவனம் கூற, வரவிருக்கும் ஆசிய லீ மான்ஸ் தொடரில் அஜித்துடன் சேர்ந்து பயணிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளதாக நரேன் தெரிவித்துள்ளார். ஃபார்முலா – 1 பந்தயத்தில் பங்கேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர் நரேன் என்பது குறிப்பிடத்தக்கது.
News August 7, 2025
ஆசிய கோப்பை: கங்குலியின் விருப்பம் இதுதான்..

ஆசிய கோப்பை தொடரில் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் அணியில் இடம்பெற வேண்டும் என கங்குலி தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் முகேஷ் சிறப்பாக விளையாடி வருவதாகவும், அவருக்கு கண்டிப்பாக ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 3 டெஸ்ட், 6 ODI, 17 டி20-களில் விளையாடியுள்ள முகேஷ் இதுவரை 33 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
News August 7, 2025
ரஷ்ய அதிபரை சந்திக்கும் டிரம்ப்

ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக இருநாட்டு தலைவர்களையும் டிரம்ப் அடுத்த வாரம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட ரஷ்யாவிற்கு குறிப்பிட்ட நாள்கள் கெடு விதித்திருந்த நிலையில், தற்போது அந்நாட்டு அதிபரை நேரில் சந்திக்க உள்ளார். பல நாடுகளின் போரை நிறுத்தியதாக கூறி வரும் டிரம்ப்பிற்கு, உக்ரைன் விவகாரம் தலைவலியாக மாறி உள்ளது.