News June 4, 2024

12 ஆவது சுற்றில் 150611 வாக்குகள் வித்தியாசம்

image

திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 11 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் 12 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் திமுக வேட்பாளர் 324309 வாக்குகள், அதிமுக வேட்பாளர் 173698 வாக்குகள், பாஜக வேட்பாளர் 93363 வாக்குகள், நாதக வேட்பாளர் 46720 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் சி.என் அண்ணாதுரை 150611 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Similar News

News August 28, 2025

தி.மலை மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம்

image

இந்தியாவில் 700-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 36 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளது. மத்திய அரசின் சார்பில் தற்போது தேசிய தரநிர்ணய வாரிய சான்றிதழ் தமிழ்நாட்டில் சென்னை ஓமந்தூரார்,திருவள்ளூர்,தேனி, கன்னியாகுமரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது என பொது சுகாதார துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

News August 28, 2025

மனநல மையங்கள் பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை.

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து மனநல மருத்துவமனைகள் மற்றும் மறுவாழ்வு மையங்களும் மாநில மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார். மனநல பராமரிப்பு சட்டம் 2017-இன்படி, ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்கத் தவறினால், அனுமதியின்றி செயல்படும் மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் (ஆக.27) எச்சரித்துள்ளார்.

News August 27, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (27.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!