News June 4, 2024
மயிலாடுதுறை 15 ஆவது சுற்று நிலவரம்

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் 15 சுற்று வாக்கு எண்ணிக்கை இதுவரை முடிந்துள்ளது. 15வது சுற்று முடிவில் காங்கிரஸ் 3,74, 122, அதிமுக 1,72,023, பாமக 1,25,252, நாதக 90,518 வாக்குகள் பெற்றுள்ளன. இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா 2,02,099 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
Similar News
News March 3, 2026
மயிலாடுதுறை: +2 தேர்வில் 177 பேர் ஆப்சென்ட்

மயிலாடுதுறை மாவட்டத்தில் +2 அரசு பொது தேர்வு நேற்று முதல் தொடங்கியது. மாவட்டத்தில் 41 தேர்வு மையங்களில் நடைபெற்றது. 4847 மாணவர்கள் 5662 மாணவிகள் என மொத்தம் 10,509 மாணவ, மாணவிகள் நேற்று பொதுத்தேர்வு எழுதினர் விண்ணப்பித்தவர்களில் 177 பேர் தேர்வு எழுத வரவில்லை. 10 பறக்கும் படைகள் 38 நிலையான படைகள் 13 வழிதட அலுவலர்கள் 41 முதன்மை கண்காணிப்பாளர்கள் 41 துறை அலுவலர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News March 3, 2026
மயிலாடுதுறை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News March 3, 2026
மயிலாடுதுறை: திமுகவில் இனைந்த மாற்று கட்சினர்

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, திமுக குத்தாலம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் AR ராஜா ஏற்ப்பாட்டில், நேற்று முஸ்டக்குடி கிராமம் சேர்ந்த முன்னாள் கூட்டுறவு சங்க துணைத் தலைவர், அதிமுக கிளை செயலாளர் பழனி உள்ளிட்ட 75க்கும் மேற்ப்பட்டோர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். உடன் கழக நிர்வாகிகள் மற்றும் மூத்த முன்னோடிகள் பலர் உடன் இருந்தனர்.


