News June 4, 2024
வெற்றிக்காக போராடும் மாநில கட்சிகள்

8 வடகிழக்கு மாநிலங்களில் சிக்கிம், மிஸோரம், மேகாலயா ஆகிய 3 மாநிலங்களில் அம்மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளன. சிக்கிமில் உள்ள ஒரு தொகுதியில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும், மிசோரமில் உள்ள ஒரு தொகுதியில் ஜோரம் மக்கள் இயக்கமும் முன்னிலை வகித்து வருகின்றன. மேகாலயாவில் உள்ள இரு தொகுதிகளில் ஒன்றில் மக்கள் குரல் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
Similar News
News March 3, 2026
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

அய்யா வைகுண்டரின் அவதார விழாவையொட்டி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு நாளை (மார்ச் 4) உள்ளூர் விடுமுறையாகும். இதேபோல், திருவப்பூர் முத்து மாரியம்மன் கோயில் விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 9-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்ய மார்ச் 14 வேலைநாளாகும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. SHARE IT
News March 3, 2026
காங்கிரஸை வெளியேற்ற பாஜக விரும்புகிறது: வீரமணி

திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை போல, பதவிகளை விட கொள்கைகள் முக்கியம் என்பதை காங்கிரஸ் தலைவர்கள் உணர வேண்டும் என கி.வீரமணி தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. அதற்கு இடம் தரக்கூடாது என்று ஸ்டாலின் முழுமூச்சுடன் செயல்பட்டு வருவதாகவும், பாஜகவின் திட்டத்துக்கு காங்கிரஸ் பலியாகிவிட கூடாது என்றும் கூறியுள்ளார்.
News March 3, 2026
10-வது பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

வரும் மார்ச் 11-ம் தேதி தொடங்க உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை TN அரசு வெளியிட்டுள்ளது. மாணவர்களின் விண்ணப்ப எண் & பிறந்த தேதியை பயன்படுத்தி <


