News June 4, 2024

பெரம்பலூர்: 2,73,790 வாக்குகள் முன்னிலை

image

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் 14வது சுற்றுகள் முடிவடைந்த நிலையில், திமுக வேட்பாளர் அருண் நேரு தொடர்ந்து 4,22,495 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 14,8705 வாக்குகள் பெற்று 2ஆம் இடம் பிடித்துள்ளார். ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் 1,12,556 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் தேன்மொழி 78778 வாக்கு பெற்றுள்ளார்.

Similar News

News September 13, 2025

முதல்நிலை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அரசு திட்டங்களின் செயல்பாடுகளின் முன்னேற்ற நிலை குறித்து அனைத்துத்துறை முதல்நிலை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் திருமதி எம்.லக்ஷ்மி மற்றும் மாவட்ட ஆட்சியர் திருமதி. மிருணாளினி தலைமையில் நேற்று இக்கூட்டம் நடைபெற்றது.

News September 12, 2025

பெரம்பலூர்: தேர்வு இல்லாமல் வங்கியில் வேலை

image

SBI வங்கியில் காலியாக உள்ள 122 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு BE, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க..

News September 12, 2025

பெரம்பலூர்: பொது விநியோகம் திட்ட குறைதீர் முகாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பொது விநியோகம் திட்டம் சார்ந்த குறைபாடுகளை தெரிவிப்பதற்கும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண பொது விநியோகம் திட்ட குறைதீர் முகாம் பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமத்தில் நாளை (13-09-2025) காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் மிருனாளினி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!