News June 4, 2024
56,943 வாக்கு வித்தியாசத்தில் விசிக வேட்பாளர் முன்னிலை

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 12 ஆம் சுற்று முடிவில் விசிக – 2,78,239, அதிமுக – 2,21,387, பாமக – 99,766, நாம் தமிழர் – 35,447 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் வி.சி.க வேட்பாளர் ரவிக்குமார் 56943 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
Similar News
News January 25, 2026
விழுப்புரம்: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

விழுப்புரம் மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News January 25, 2026
விழுப்புரத்தில் சோகம்: வயிற்று வலியால் தற்கொலை!

விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் அருகே கண்ணாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோதண்டபாணி, நீண்டகால வயிற்று வலியால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். நேற்று வலி அதிகமானதால் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை அவர் உட்கொண்டார். முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 25, 2026
விழுப்புரம்: வாகனம் மோதி மூதாட்டி துடிதுடித்து பலி

விழுப்புரம், மேல்மலையனூர் அருகே தேவனூர் புற்றுக்கோவில் பகுதியில், சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்தார். அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கிராம நிர்வாக அலுவலர் புகாரின்பேரில், வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த மூதாட்டியின் அடையாளம் & விபத்தை வாகன ஓட்டி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


