News June 4, 2024
நிதிஷ் குமாருடன் பேசவில்லை: சரத் பவார்

INDIA கூட்டணி சார்பில் பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமாருடன், மூத்த தலைவர் சரத் பவார் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது துணை பிரதமர் பதவியை தர முன் வந்ததாகவும் பரவலாக தகவல் வெளி வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தாம் நிதிஷ் குமார் உள்ளிட்ட யாருடனும் இதுவரை பேசவில்லை என்று பதிலளித்தார்.
Similar News
News March 7, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 630 ▶குறள்:
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
▶பொருள்: துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்.
News March 7, 2026
திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது: பா.ரஞ்சித்

நாங்குநேரியிலும், சிவகங்கை இடைக்காட்டூரிலும் நடந்த சாதிவெறி தாக்குதல்கள் நெஞ்சை உறைய வைப்பதாக பா.ரஞ்சித் கூறியுள்ளார். தனது X பதிவில், கடந்த 6 ஆண்டுகளில் நெல்லையில் 633 வன்கொடுமை வழக்குகள் பதிவானதை சுட்டிக்காட்டி, இப்பிரச்னைகளை எதிர்கொள்வதில் திமுக அரசும், போலீசும் தோல்வி அடைந்திருப்பதாக அவர் சாடியுள்ளார். எனவே, TN-ல் சமூக நல்லிணக்கத்தை மீட்டெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
News March 7, 2026
சற்றுமுன்: கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது

சுமார் 10 மாதங்களுக்கு பிறகு சென்னையில், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் (14.2 கிலோ எடை) விலை ₹60 உயர்ந்து ₹928.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹114.50 உயர்ந்து ₹2,043.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 7 முதல் இந்த விலை மாற்றம் அமலுக்கு வரும். அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர், வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றமே இதற்கான காரணமாக கூறப்படுகிறது.


