News June 4, 2024
திருவள்ளூர்: சறுக்கியும் சாதித்த ‘சர்ச்சை’ வேட்பாளர்

நாடே எதிர்பார்த்த எம்பி தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. திருவள்ளூரில் பாஜக சார்பில் போட்டியிட்ட ‘சசிகலா புஷ்பா சர்ச்சை’யில் சிக்கிய பாலகணபதி தோல்வி முகத்தில் உள்ளார். பாஜக சார்பில் நட்சத்திர வேட்பாளராக களமிறங்கிய இவர், கடுமையாக களமாடியும் வெற்றி இலக்கை நோக்கி முன்னேற இயலவில்லை. இருப்பினும் நோட்டாவை தாண்டாத கட்சி என்று கேலிக்குள்ளான பாஜகவை நல்ல வாக்கு சதவீதத்தை நோக்கி நகர்த்தியுள்ளார்.
Similar News
News August 29, 2025
திருவள்ளூர்: சென்ட்ரல் மின்சார ரயில்கள் ரத்து

பொன்னேரி கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி (இரவு 11:20 ரயில்) மற்றும் கும்மிடிப்பூண்டி – சென்ட்ரல் (இரவு 9:25 மணி ரயில்) இன்று முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 29, 2025
திருவள்ளூரில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் லேசான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News August 29, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் நேற்று (ஆக.28) இரவு 11 மணி முதல் இன்று காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.