News June 4, 2024

பதினோராவது சுற்று முன்னிலையில் திமுக

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: 11வது சுற்றில் காங்., வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 76,598 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். காங், – 2,50,015, பாஜக – 1,73,417, நாதக – 48,395, அதிமுக – 44,786 11ம் சுற்று முடிவில் அதிமுக தொடர்ந்து 4ம் இடத்தில் உள்ளது. இதுவரை எண்ணிய மொத்த வாக்குகள்: 5,42,597

Similar News

News September 12, 2025

திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 12) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News September 12, 2025

நெல்லை ம.சு பல்கலையில் உதவி பேராசிரியர் பணி

image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை உளவியல் துறையில் முதுகலை உளவியல் பயிற்றுவிக்க தற்காலிக உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பல்கலை.நிதி நல்கை குழு விதி படி கல்வித் தகுதி நியமிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் 18ம் தேதி பல்கலைக்கழகத்தில் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் தரவுத்தாளை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சான்றுகளுடன் வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர்

News September 12, 2025

நெல்லை: பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் சஸ்பெண்ட்

image

தருவை அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த ஆங்கில பட்டதாரி ஆசிரியர் குரு விநாயகம் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்வதாக மாணவிகள் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.இந்த மனுவின் மீது விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். விசாரணையில் ஆசிரியர் மீது சுமத்திய குற்றச்சாட்டு உண்மை என தெரிய வந்ததால் இன்று முதன்மை கல்வி அதிகாரியால் பணி நீக்கம் செய்யபட்டார்.

error: Content is protected !!