News June 4, 2024

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் நிலவரம்

image

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்குகள் இன்று மதியம் 2 மணி நேர நிலவரப்படி 9-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணி சார்பில் மதிமுக – துரை வைகோ – 2,23,921, அதிமுக – கருப்பையா – 97,796, அமமுக – செந்தில்நாதன் – 48,339, நா.த.க – ராஜேஷ் – 43,983, 1,26,125 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலை வகுத்து வருகிறார்.

Similar News

News September 12, 2025

திருச்சி: ஊர்க்காவல் படையில் சேர அழைப்பு

image

திருச்சி ஊர்க்காவல் படை அமைப்பில் 53 ஆண் ஊர்காவல் படையினரும், 4 பெண் ஊர்க்காவல் படையினரும் என மொத்தம் 57 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சேர விரும்புவோர் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு, பூர்த்தி செய்து செப்.,22-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என திருச்சி எஸ்.பி செல்வ நாகரத்தினம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். SHARE பண்ணுங்க.

News September 12, 2025

திருச்சி ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி

image

எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால், திருச்சி மற்றும் திருச்சி வழி ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் ராக்போர்ட், பாண்டியன், சோழன் விரைவு ரயில்கள் வரும் 17ஆம் தேதி முதல் மீண்டும் சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News September 12, 2025

திருச்சி ஏர்போர்ட்டில் புதிய வசதி அறிமுகம்

image

திருச்சி விமான நிலையத்தில் நம்பகமான பயணியருக்கான விரைவான குடியேற்ற சேவை திட்டம் (Fastrack Immigration) நேற்று (செப்.11) முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இத்திட்டத்தை டெல்லியில் இருந்து மத்திய அமைச்சர் அமித்ஷா காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். வெளிநாடு செல்லும் பயணிகள் விரைவாக இமிகிரேஷன் சோதனையை முடித்து, பயணத்தை எளிமையாக மேற்கொள்ளும் வகையில் 4 புதிய கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. SHARE NOW!

error: Content is protected !!