News June 4, 2024

தேனியில் டிடிவி தினகரன் பின்னடைவு

image

2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேனி நாடாளுமன்றத் பகுதியில் திமுக சார்பாக தங்க தமிழ்ச்செல்வன் அமமுக சார்பாக டிடிவி தினகரன் கடும் போட்டியாளராக பார்க்கப்பட்ட நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் முன்னிலையில் உள்ளார். டிடிவி தினகரன் இரண்டாம் இடத்தில் உள்ளதால் அமமுக தொண்டர்கள் மிகவும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

Similar News

News November 7, 2025

தேனி: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு சிறை

image

ஆண்டிபட்டி தாலுகா பகுதியை சேர்ந்தவர் முருகன் (42). இவர் 2023.அக்.1ல் அப்பகுதியை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். கடமலைக்குண்டு போலீசார் முருகனை கைது செய்த நிலையில் இந்த வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று (நவ.6) முருகனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.

News November 7, 2025

தேனி: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

தேனியில் மாவட்ட பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீா் கூட்டம் நாளை (நவ.8) காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. மக்கள் இதில் கலந்து கொண்டு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம், பிழைத் திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவுகளிக்கு மனு அளித்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 7, 2025

தேனி: இளம்பெண் தற்கொலை

image

போடியை சேர்ந்த அசோனியா (30) என்பவர் அவரது கணவரை விவாகரத்து செய்த நிலையில் காமாட்சி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு தேனியில் வசித்து வந்துள்ளார். சில தினங்களாக காமாட்சி மற்றும் அசோனியாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த அசோனியா நேற்று (நவ.6) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!