News June 4, 2024
தலைநகரை தன்வசப்படுத்தும் தாமரை?!

ஆம் ஆத்மி கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட விவகாரம் தேர்தலில் அனுதாப அலையாக மாறும் என ஆம் ஆத்மி எதிர்பார்த்தது. ஆனால், தற்போதைய தேர்தல் கள நிலவரம் அந்த எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கியிருக்கிறது. தலைநகரை தாமரை தன்வசப்படுத்தக்கூடும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
Similar News
News August 27, 2025
திண்டுக்கல்: 108 நன்மை தரும் விநாயகர்!

திண்டுக்கல் மக்களே…, இன்று(ஆக.27) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீட்டில் விநாயகர் வழிபாடு செய்வது வழக்கம். இந்நிலையில், கோபாலசமுத்திரக் கரையில் அமைந்துள்ள 108 விநாயகர் கோயிலில் இன்று திருவிழா கொண்டாடப்படுகிறது. பால்குடம், நேர்த்திக் கடன் செலுத்துதல் எனப் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும். 108 விநாயகரும் 108 நன்மைகளைத் தரக்கூடியவர்களாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News August 27, 2025
OTP பெறாமல் ஆன்லைன் சேவைகளே கிடையாது: HC

மத்திய, மாநில & தனியார் நிறுவனங்கள் பல்வேறு சேவைகளுக்காக OTP பெறுவது தனியுரிமை விதிகளுக்கு முரணானது என கூறி, OTP-க்கு தடை விதிக்க மதுரை HC-ல் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட், இன்றைய காலகட்டத்தில் OTP பெறாமல் எந்த ஒரு ஆன்லைன் சேவையும் நடைபெறாது என தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தது. முன்னதாக, ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற DMK முன்னெடுப்பில் OTP பெறுவதற்கு HC தடை விதித்தது.
News August 27, 2025
மீண்டும் அதிமுகவில் இணைய முடியாது.. EPS அதிரடி முடிவு

பாஜக கூட்டணியிலிருந்து விலகிய <<17528723>>OPS<<>>, நிபந்தனையின்றி அதிமுகவில் இணைய தயார் கூறியதற்கு, ‘இணைக்க மாட்டோம்’ என்று கடந்த வாரம் EPS திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்நிலையில், நேற்று ஒன்றிணைய வேண்டும் என EPS-க்கு மீண்டும் அழைப்பு விடுத்தார். இதுகுறித்து மூத்த தலைவர்கள் EPS-யிடம் ஆலோசிக்கையில், அவரை நீக்கியது நீக்கியதுதான், மீண்டும் இணைப்பு குறித்து பேச வேண்டாம் என EPS முற்றுப்புள்ளி வைத்துவிட்டாராம்.