News June 4, 2024

திண்டுக்கல்: சச்சிதானந்தம் தொடர்ந்து முன்னிலை

image

திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 8வது சுற்று நிறைவடைந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்-253118, எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-83812, பாமக வேட்பாளர் திலகபாமா – 41492, நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-34962 வாக்குகள் பெற்றுள்ளனர். சச்சிதானந்தம் 1 லட்சத்து 70 ஆயிரம் வாக்கு முன்னிலை வகிக்கிறார்.

Similar News

News September 12, 2025

திண்டுக்கல்: பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்!

image

திண்டுக்கல்: வேடசந்தூரைச் சேர்ந்த கார்த்திக் ஓராண்டிற்கு முன்பாக கன்னியாகுமரி, கருங்கல் அருகே பாலூர் காட்டுவிளை என்ற பகுதியை சேர்ந்த ஜெய அன்னாள்(20) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். கடந்த 40 நாட்களுக்கு முன்பாக குழந்தை பிறந்ததிலிருந்தே கணவர் தன்னுடன் பேசுவதில்லை என்பதற்காக குழந்தையின் வாயில் பேப்பரை திணித்து கொலை செய்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

News September 12, 2025

திண்டுக்கல்: இலவச பயிற்சியுடன் வேலை வாய்ப்பு!

image

திண்டுக்கல் மக்களே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், இளைஞர்களுக்கு இலவசமாக வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு (Videography and Video Editing) பயிற்சி 3 மாதம் வழங்கபடவுள்ளது. இப்பயிற்சியை முழுமையாக முடிப்பவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 12, 2025

திண்டுக்கல்: துணி காய வைத்த பெண் கரண்ட் தாக்கி பலி!

image

திண்டுக்கல்: வத்தலகுண்டு பகுதியில் வீட்டில் இரும்பு கம்பியில் ஈரத் துணியை காய வைத்தபோது மின்சாரம் தாக்கி ஜோதி என்ற பெண் உயிரிழந்தார். ஜோதியை காப்பாற்றச் சென்ற அவரது மகன் சவுந்தரபாண்டி, மகள் ராஜேஸ்வரி ஆகியோரும் காயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!