News June 4, 2024
6வது சுற்றிலும் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: 6வது சுற்றில் காங். வேட்பாளர் ராபர்ட் புரூஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.
காங். – 1,36,957
பாஜக – 93,481
நாதக – 27075
அதிமுக – 25322
6ம் சுற்று முடிவில் அதிமுக தொடர்ந்து 4ம் இடத்தில் உள்ளது.
இதுவரை எண்ணிய மொத்த 2,96,366 வாக்குகள் பதிவாகியுள்ளன.
Similar News
News July 7, 2025
குதிரையில் மிடுக்காக பரிவேட்டைக்கு சென்ற சுப்ரமணிய சுவாமி

நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆனி பெருந்திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8ம் திருநாளான இன்று காலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுவாமி நடராஜர் பச்சை சாத்திய கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். பின்னர் மதியம் சுப்பிரமணிய சுவாமி குதிரை வாகனத்தில் பரிவேட்டை சென்றார். இதனை நூற்றுக்கணக்கான பக்தர்கள் கண்டு கழித்தனர்.
News July 7, 2025
நெல்லை: ஆன்லைன் ரம்மியால் உயிரை மாய்த்த வாலிபர்

நெல்லை மாவட்டம், சீவலப்பேரி அருகே மேல பாலாமடையைச் சேர்ந்த ஆறுமுக கனி (33), டிரைவரான இவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் ரூபாய் இழந்து கடனில் சிக்கினார். இதனால் விரக்தியடைந்த அவர் விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை.07) அதிகாலை உயிரிழந்தார்.
News July 7, 2025
நெல்லை: கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு (1/1)

தமிழ்நாடு வருவாய்த் துறையில் 2,299 கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில். நெல்லைக்கு 45 காலிப் பணியிடங்கள் உள்ளது. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 கடைசி நாளாகும். இப்பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், தமிழில் எழுத/படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளம்: ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். சைக்கிள்/ டூவீலர் ஒட்டத் தெரிந்தால் கூடுதல் மதிப்பெண். <<16974235>>மேலும் அறிய<<>>