News June 4, 2024
தென்காசி பாராளுமன்ற தொகுதி தற்போதைய நிலவரம்!

தென்காசி மாவட்ட பாராளுமன்ற தொகுதி 12.25மணி நிலவரப்படி, தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் ஆகிய ஆறு தொகுதிகளில் என்னப்பட்ட ஓட்டு எண்ணிக்கை நிலவரம். தென்காசி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை விபரம் தற்போது, 12.25 மணி நிலவரம் திமுக 114644, அதிமுக, 60103 பாஜக, 53717 நாத, 33902 வாக்குகள் பெற்றுள்ளது.
Similar News
News September 12, 2025
தென்காசி: வீடுதேடி குடிமைப் பொருள்கள் வழங்கல்

தென்காசி மாவட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடும்ப அட்டைதாரா்களுக்கு செப்.13, 14 ம் தேதிகளில் வீடுதேடி குடிமை பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என தென்காசி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளா் நரசிம்மன் அறிவித்துள்ளாா். இனிவரும் மாதங்களிலும் மாதத்தின் இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திட்டப் பயனாளிகளுக்கு இல்லங்களுக்கே நேரில் வந்து குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யபட உள்ளது.
News September 12, 2025
செங்கோட்டை எக்ஸ்பிரஸ் இன்று இங்கு மட்டும் இயக்கம்

செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று திண்டுக்கல் – கரூர் இடையே மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஈரோடு – கரூர் இடையே பொறியியல் பணிகள் காரணமாக இந்த ரயில் பகுதி தூரம் ரத்து செய்யபட்டுள்ளது. மேலும், கொடைக்கானல் ரோட்டில் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக செங்கோட்டை- திண்டுக்கல் இடையே (செவ்வாய் தவிர) ஏற்கனவே ரத்து செய்யபட்டுள்ளது.
News September 12, 2025
தென்காசி: மூதாட்டியிடம் நகை திருட்டு

தென்காசி மாவட்டம், கடையத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி மகாலட்சுமி வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த ஒருவர் தலைவலி தைலம் தடவிவிடுவதாகக் கூறி, மூதாட்டி அணிந்திருந்த நகைகளைக் கழற்றி கீழே வைக்கச் சொல்லியிருக்கிறார். நகைகளைக் கழற்றி வைத்ததும், அவற்றை எடுத்துக்கொண்டு அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கடையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.