News June 4, 2024
விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை

விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் முன்னிலை பெற்றுள்ளார். 20 சுற்றுகள் கொண்ட வாக்கு எண்ணிக்கையில் தற்போது 2 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் 9,403 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ஜ.க. வேட்பாளர் நந்தினி 3,411 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் ராணி 754 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
Similar News
News September 12, 2025
அதிமுக கூட்டணியில் முக்கிய மாற்றம்.. பாஜக எடுத்த முடிவு!

டெல்லியில் முகாமிட்டுள்ள நயினார் நாகேந்திரன், NDA கூட்டணி, உள்கட்சி பூசல் தொடர்பாக அமித்ஷா, JP நட்டா, BL சந்தோஷ் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார். அதுமட்டுமல்லாமல் கூட்டணியில் இருந்து விலகிய OPS, TTV-யை டெல்லிக்கு அழைத்து பேச பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. ஆனாலும், ஒருங்கிணைப்பு விவகாரத்தில் EPS, திட்டவட்டமாக நோ சொல்லி வருவதால், அவரை சமாதானம் செய்யவும் ஒருபுறம் முயற்சிகள் நடந்து வருகிறதாம்.
News September 12, 2025
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு: இந்தியா

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஐ.நா., சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. அந்நாட்டின் இறையாண்மை, ஒற்றுமையை மதிப்பதாக தெரிவித்த இந்தியா, தமிழர்களின் சமத்துவம், நீதி, அமைதி ஆகிய கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகவும் கூறியுள்ளது. முன்னதாக, 2015, ஜன.9-க்கு முன்பு அகதிகளாக இந்தியாவிற்குள் வந்த இலங்கை தமிழர்களை சட்டப்பூர்வமாக தங்க இந்தியா அனுமதி அளித்திருந்தது.
News September 12, 2025
உடல் வலுபெற இந்த யோகா காலையில் பண்ணுங்க!

*தரையில் நேராக நிற்கவும்.
*பிறகு ஒரு காலை மட்டும் முன்னால் வைத்து, மற்றொரு காலை பின்னால் வைக்கவும்.
*முன் காலின் பாதங்களை ஊன்றி, பின்காலின் விரல்களை மட்டும் ஊன்றி வைக்கவும்.
*2 கைகளையும் மேலே எழுப்பி ஒன்றிணையுங்கள்.
*இந்தநிலையில் 25- 30 விநாடிகள் வரை இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். இதேபோல, கால்களை மாற்றி செய்யவும்.
அனைத்து தசைகளும் வலுபெற இந்த வீரபத்ராசனம் உதவும்.Share it.