News June 4, 2024
டெல்லியில் பாஜக முன்னிலை

டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும் பாஜக முன்னிலையில் உள்ளது. அங்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், அக்கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளன. தற்போது வரை அனைத்து தொகுதிகளிலும் பாஜக 1500- 2,500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.
Similar News
News August 27, 2025
அமெரிக்காவால் பாதிக்கப்படும் துறைகளுக்கு சலுகை

அமெரிக்க வரிவிதிப்பால் அதிக பாதிப்பிற்கு உள்ளாகும் தொழில் துறையினருக்கு பல்வேறு சலுகைகளை அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஜவுளி, ஃபர்னிச்சர், வேளாண் பொருள்கள், லெதர் உள்பட பல்வேறு துறையினருக்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.
News August 27, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News August 27, 2025
CM ஸ்டாலின் குடும்பத்துடன் மோதலா? அமைச்சர் நேரு பதில்

திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக திறக்கப்பட்ட பஸ் நிலையம் அருகே, அமைச்சர் நேருவுக்கு 300 ஏக்கர் நிலம் இருப்பதாக EPS குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் பஞ்சப்பூரில் தனக்கு சொத்து எதுவும் இல்லை என தெரிவித்த நேரு, அப்படி இருந்தால் அரசோ, மக்களோ எடுத்துக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார். அதேபோல், CM குடும்பத்துடன் நேருவுக்கு மோதல் இருப்பதாக செய்தி பரவியதையும் அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.