News June 4, 2024
நெல்லையில் எதிர்பாராத திருப்பம்

மக்களவை பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இந்திய கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வெற்றி பெறும் தருவாயில் உள்ளார்.
Similar News
News July 6, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஜூலை 06] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் தர்ஷிஐஆ இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News July 6, 2025
2025 அரையாண்டில் 19% விபத்துகளின் மரணம் குறைவு

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில்; திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விபத்துகளின் மூலம் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு அரையாண்டில் விபத்துகளின் மூலம் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை 19% குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
News July 6, 2025
ரூ.4 கூடுதல் கட்டணம் கேட்ட நடத்துநருக்கு ரூ.12,000 அபராதம்

நாங்குநேரியைச் சேர்ந்த கண்ணன், பார்வதிநாதன் ஆகியோர் நெல்லையிலிருந்து நாங்குநேரி சென்ற பஸ்ஸில் ஏறிய போது பைபாஸ் வழியாக செல்லும் என நடத்துனர் கூறினர். பின்னர் இருவரையும் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டார். மேலும் டிக்கெட் கட்டணத்தில் ரூ.4 கூடுதலாக பெற்றார். இது குறித்து இருவரும் அளித்த புகாரின் படி நெல்லை நுகர்வோர் குறைதீர் ஆணையம் விசாரித்து நடத்துனர் ரூ.12 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது.