News June 4, 2024
காஞ்சிபுரத்தில் திமுக முன்னிலை

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் 3ஆவது சுற்றில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. இதில் திமுக- 26,398 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது இடத்தில் அதிமுக-15,958, மூன்றாவது இடத்தில் பாமக-18,279 வாக்குகள், நாம் தமிழர் கட்சி-.5,187 வாக்குகள் பெற்றுள்ளது. இதில் திமுக வேட்பாளர் தொடர்ந்து 28,410 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
Similar News
News August 21, 2025
காஞ்சிபுரத்தில் 1000-ம் பேருக்கு வேலை ரெடி!

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் & மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News August 21, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெறும் இடங்கள்!

காஞ்சிபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அரசு நகர் சாய் மனோன்மணி திருமண மண்டபத்திலும், திருப்பெரும்புதூர் வட்டம் திருமங்கலம் ஊராட்சி குரு மஹாலிலும், உத்திரமேரூர் வட்டம் திருமுக்கூடல் R.R.K திருமண மஹால்,
குன்றத்தூர் நகர்ப்புற பஞ்சாயத்துக்கு மலையம்பாக்கம் வி.எம்.ஆர் திருமண மஹாலிலும் நடைபெற உள்ளது.
News August 20, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 20) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.