News June 4, 2024
முன்னாள் முதல்வர் தொடர்ந்து பின்னடைவு

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டார். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பின்னடைவில் உள்ளார். 11 மணி நிலவரப்படி ஓபிஎஸ் 17295 வாக்குகள் பெற்று திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனியை விட 14658 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.
Similar News
News August 21, 2025
ராமநாதபுரம்: தாசில்தார்கள் பணியிட மாற்றம்

✅ ராமநாதபுரம் தாசில்தார் ரவி, ஆய மேற்பார்வை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
✅ தேர்தல் தாசில்தார் காளீஸ்வரன், ராமநாதபுரம் தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
✅ கீழக்கரை தாசில்தார் ஜமால் முஹமது, கோட்ட ஆய அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
✅ ராமநாதபுரம் சமூகப் பாதுகாப்புத் திட்ட தாசில்தார் செல்லப்பா, கீழக்கரை தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார் என இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News August 20, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (ஆகஸ்ட் 20) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News August 20, 2025
ராம்நாடு: மீனவர்களுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 மீனவர்களை ஜூலை.13 அன்று இலங்கை கடற்படை கைது செய்தனர். இந்த வழக்கு 4-வது முறையாக இன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் வழக்கை விசாரித்த நீதிபதி 7 மீனவர்களில் படகு ஓட்டுனர் யார் என்பது விசாரணையில் தெரியவராதால் மீனவர்கள் 7 பேருக்கும் செப்.3 வரை நீதிமன்றக் காவல் நீட்டித்து உத்தரவிட்டார்.