News June 4, 2024

நாகப்பட்டினம் 3 ஆவது சுற்று நிலவரம்

image

நாகப்பட்டினத்தில் தற்போது மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், திமுக + இ.கம்யூ கூட்டணி 50, 539 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தொடர்ந்து அதிமுக கூட்டணி 27, 735, நாம் தமிழர் 13, 834, பாஜக 9, 533 வாக்குகளும் பெற்றுள்ளன.

Similar News

News August 21, 2025

பொதுமக்களுக்கு போலீஸ் சூப்ரண்ட் உறுதி

image

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (ஆக.20) நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் சு.செல்வகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு புகார்கள் தொடர்பாக 18 மனுக்களை பெற்ற அவர், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

News August 21, 2025

மாவட்ட ஆட்சியர் தலைமையில் முன்னேற்பாடு கூட்டம்

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தலைமையில் இன்று (ஆக.20) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், வேதாரண்யம் சார் ஆட்சியர் அமீத் குப்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

News August 20, 2025

என்ன சான்றுகளை பெறலாம்? (பாகம் – 2)

image

வருமான சான்று, சாதி சான்று, இருப்பிடச் சான்று,கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் & வேலையில்லாதோர் சான்றிதழை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!