News June 4, 2024
புதுவை தேர்தல் முதல் சுற்று நிலவரம்

புதுச்சேரி மாநிலத்தில் முதல் சுற்று முடிவடைந்து 1,22,713 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம் 59,759 வாக்குகளில் முன்னிலையில் உள்ளார், பாஜக கட்சி வேட்பாளர் நமச்சிவாயம் 49,909 வாக்குகளில் சேகரித்து உள்ளார், அதிமுக கட்சி வேட்பாளர் தமிழ் வேந்தன் 3247 வாக்குகள் சேகரித்து உள்ளார்.
Similar News
News August 21, 2025
புதுச்சேரி: வங்கியில் வேலை.. Apply Now

புதுச்சேரி இந்திய போஸ்ட் மேமெண்ட்ஸ் பேங்க் கிளையில் வங்கித் தொடர்பாளராக பணியாற்ற விண்ணப்பக்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். இதற்கு வயது 19 முதல் 75 வயது வரை இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 30ஆம் தேதி கடைசி தேதியாகும். மேலும் தகவலுக்கு புதுச்சேரி தலைமை அஞ்சல் நிலைய மேலாளரை அனுகவும்.
News August 21, 2025
நிலுவை மின் கட்டணம் செலுத்த எச்சரிக்கை!

புதுச்சேரி மின்துறை செயற்பொறியாளர் கிராமம் தெற்கு கிருஷ்ணசாமி நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், கரையான், புத்தூர் ஆகிய மின் அலுவலகங்களுக்கு உட்பட்ட மின் நுகர்வோர் தங்கள் நிலுவைத் தொகையை உடனே செலுத்த வேண்டும். இல்லையென்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். கட்டணம் செலுத்திய பிறகு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும்.” என்று கூறப்பட்டுள்ளது
News August 21, 2025
துணை வட்டாட்சியர் தேர்வு -ஹால் டிக்கெட் வெளியீடு

அரசு செயலா் ஜெய்சங்கா் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள துணை வட்டாட்சியா் பணிக்கான எழுத்துத் தோ்வு வரும் 31-ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 101 தோ்வு மையங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தோ்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.