News June 4, 2024
ஹெச்.டி. குமாரசாமி முன்னிலை

கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜகவும் 5 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் கட்சியும் முன்னிலையில் உள்ளன. இங்குள்ள மாண்டியா தொகுதியில் முன்னாள் முதல்வரும், மஜத தலைவருமான ஹெச்.டி. குமாரசாமி போட்டியிட்டுள்ளார். அவர் இத்தொகுதியில் 2 லட்சத்துக்கும் 18 ஆயிரத்துக்கும் மேல் வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளரை விட 88 ஆயிரத்துக்கும் மேலான வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
Similar News
News August 6, 2025
தங்கம் விலை ₹75 ஆயிரத்தை தாண்டியது

ஆபரணத் தங்கத்தின் விலை 3-வது நாளாக இன்றும் உயர்ந்து ₹75 ஆயிரத்தை தாண்டியதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று சவரனுக்கு ₹80 உயர்ந்து ₹75,040-க்கும், கிராமுக்கு ₹10 உயர்ந்து ₹9,380-க்கும் விற்பனையாகிறது. கடந்த 1-ம் தேதி ஆபரணத் தங்கம் (சவரனுக்கு) ₹73,200ஆக இருந்த நிலையில், 5 நாள்களில் ₹1,840 அதிகரித்துள்ளது.
News August 6, 2025
இதுதான் கூலி படத்தின் கதையா?

*நாகர்ஜூனா & Gang Illegal Watch/தங்கம் கடத்தலில் ஈடுபடுகின்றனர். *இதனை ஸ்ருதிஹாசன் வெளிக் கொண்டு வந்துவிடுகிறார். அவரை வில்லன் கேங்க் கொல்ல திட்டமிடுகிறது.
*இதில், சத்யராஜ் தலையிட, அவர் கொல்லப்படுகிறார்.
*இதற்கு பழிதீர்க்க, ஸ்ருதியை காப்பாற்ற தலைவர் வருகிறார். அவருக்கு ஒரு பயங்கரமான பிளாஷ்பேக் இருக்கிறது.
*கடைசியில் நாகர்ஜூனா & கேங்க் கொல்லப்பட, கிளைமாக்ஸில் ரோலக்ஸ் போல ஆமிர்கான் என்ட்ரி.
News August 6, 2025
2026ல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி: இபிஎஸ்

திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளதால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். 2026 தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனக் கூறிய அவர், தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள்தான் உள்ளன. திமுக ஆட்சிக்கு வென்டிலேட்டர் (ஆக்ஸிஜன்) பொருத்தப்பட்டு விட்டது. 2026 பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியை மக்கள் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.