News June 4, 2024
36 தொகுதிகளில் திமுக முன்னிலை

தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை முதல் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி 36 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதிமுக கூட்டணி விருதுநகர், ஈரோடு உள்ளிட்ட 3 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது. நாம் தமிழர் கட்சி பல தொகுதிகளில் 4ஆவது இடத்தில் உள்ளது.
Similar News
News August 6, 2025
2026ல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி: இபிஎஸ்

திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளதால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். 2026 தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனக் கூறிய அவர், தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள்தான் உள்ளன. திமுக ஆட்சிக்கு வென்டிலேட்டர் (ஆக்ஸிஜன்) பொருத்தப்பட்டு விட்டது. 2026 பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியை மக்கள் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
News August 6, 2025
கொல்லப்பட்ட SI குடும்பத்துக்கு ₹30 லட்சம் நிதியுதவி: CM

உடுமலை அருகே படுகொலை செய்யப்பட்ட SI குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்ததோடு, ₹30 லட்சம் நிதியுதவியையும் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அடிதடி பிரச்னையை விசாரிக்கச் சென்ற SI சண்முகவேலை 3 பேர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளனர். கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் போலீசாருக்கு CM உத்தரவிட்டுள்ளார்.
News August 6, 2025
2027 WC-ல் Ro-Ko விளையாடுவார்களா?

T20 & டெஸ்டில் ஓய்வு பெற்று விட்ட நிலையில், Ro-Ko ஜோடி 2027 உலக கோப்பையை குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அப்போது ரோஹித் 40, கோலி 38 வயதை எட்டியிருப்பார்கள் என்பதால், ஃபிட்னஸ், ஃபார்ம் குறித்து கேள்விகள் எழுவது இயல்பே. இதன் காரணமாக, BCCI இளம் வீரர்களை தயார்படுத்தும் திட்டத்தில் இருப்பது வியக்கத்தக்கது அல்ல. இதுகுறித்து, இன்னும் முடிவெடுக்கப்படாத நிலையில், 2027 WC-ல் Ro-Ko விளையாடுவார்களா?