News June 4, 2024

திருச்சி வருகை தந்த துரை வைகோ

image

திருச்சி வாக்கு எண்ணும் மையத்திற்கு இன்று வருகை தந்த மதிமுக வேட்பாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தற்போது வரை தான் முன்னிலையில் இருப்பது மக்கள் என் மீதும், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையாகவே பார்க்கின்றேன் என தெரிவித்தார்.

Similar News

News August 22, 2025

ஸ்ரீரங்கம் கோயிலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

image

தமிழகத்தில் முக்கியமான 12 கோவில்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய இரண்டு கோயில்களிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 22, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

image

திருச்சியில் நாளை (ஆக.22) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமானது அரியமங்கலம் பிரகாஷ் திருமண மண்டபம், பாலகிருஷ்ணம்பட்டி பி.மேட்டூர் சமுதாயக்கூடம், லால்குடி சப்தகிரிவரர் கோவில் மண்டபம், துறையூர் ராஜ் திருமண மண்டபம், மண்ணச்சநல்லூர் காமாட்சி அம்மன் திருமண மண்டபம், மருங்காபுரி முத்தாழ்வார் பட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு வழங்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 21, 2025

திருச்சியில் எடப்பாடி பழனிசாமி 3 நாள் சுற்றுப்பயணம்

image

திருச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி திருச்சி மாவட்டத்தில் 23-ம் தேதி திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, லால்குடி பகுதியிலும், 24-ம் தேதி மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறியிலும், 25-ம் தேதி மணப்பாறை, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து பேசுகிறார்.

error: Content is protected !!