News June 4, 2024
நாகையில் அதிமுக வேட்பாளர் பின்னடைவு

நாகப்பட்டினம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் 4,015 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்.
சுர்ஜித் சங்கர் (அதிமுக) – 2,034 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
Similar News
News August 5, 2025
கில்லை ODI அணிக்கும் கேப்டனாக்கலாம்: கவாஸ்கர்

ஆஸ்திரேலியா அல்லது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சுப்மன் கில்லை கேப்டனாக்கலாம் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். கில் அணியில் அனைவராலும் விரும்பப்படும் வீரர்களில் ஒருவராக உள்ளார். ஆகவே அவரை கேப்டனாக்க இதுவே சரியான தருணம் எனவும் தெரிவித்துள்ளார். தற்போது ஒருநாள் அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா உள்ளார்.
News August 5, 2025
நடிகர் ஷா நவாஸ் பிரேம் நசீர் காலமானார்!

பிரபல மலையாள நடிகர் ஷா நவாஸ் பிரேம் நசீர்(71) கிட்னி பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். மலையாள சினிமாவின் ஜாம்பவான் பழம்பெரும் நடிகர் பிரேம் நசீரின் மகன் இவர். 1977 முதல் மலையாள மொழி படங்களில் நடித்து வந்த ஷா நவாஸ் கடைசியாக 2022-ல் வெளியான ‘ஜன கன மன’ படத்தில் நடித்திருந்தார். தமிழில் வெளியான ‘ஜாதி பூக்கள்’ (1987) படத்தில் இவர் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News August 5, 2025
டிகிரி தேவையில்ல, திறமை இருந்தா போதும்!

கல்லூரி டிகிரி முக்கியமல்ல, திறமையும் செயல்திறனும் தான் முக்கியம். நாங்கள் பணியாளரிடம் இதையே எதிர்பார்க்கிறோம் என்கிறார் டாப் டெக் நிறுவனமான Palantir-ன் சிஇஓ அலெக்ஸ் கார்ப். எலான் மஸ்கும் இதையே கூறியிருந்தார். இதன் பொருள் முறையான படிப்பு தேவையில்லை என்பதல்ல; என்ன டிகிரி வாங்கியிருந்தாலும், திறமையும் துறை சார்ந்த அறிவும் இருந்தால் தான் வளர முடியும். நம் பிள்ளைகளும் பெற்றோரும் இதை உணர வேண்டும்.