News June 4, 2024
தென்காசி தொகுதியில் ஜான் பாண்டியன் பின்னடைவு

தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் 1,126 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்.
ஜான் பாண்டியன் (பாஜக+) – 971 வாக்குகள்
கிருஷ்ணசாமி (அதிமுக+) – 618 வாக்குகள்
இசை மதிவாணன் (நாதக) – 287 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
Similar News
News August 5, 2025
சேலம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!

சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவிலின் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டத்திற்கு நாளை (ஆகஸ்ட் 6) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாகச் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News August 5, 2025
அனல் பறக்கும் THE HUNDRED TOURNAMENT..!

ஐபிஎல் போன்று இங்கிலாந்தில் நடைபெறும் 100 பால் தொடர் இன்று முதல் துவங்குகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் மொத்தம் 34 போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆண்கள், பெண்கள் என இரு பிரிவினருக்கும் தனித்தனியே போட்டிகள் நடைபெறுகின்றன. ஸ்டீவ் ஸ்மித், கிளாஸன், டேவிட் வார்னர் போன்ற பல உலகத்தர வாய்ந்த வீரர்கள் இத்தொடரில் விளையாடவுள்ளதால் ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News August 5, 2025
காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து: ஆக.8-ல் விசாரணை

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரும் மனு, ஆக.8-ல் SC-யில் விசாரணைக்கு வரவுள்ளது. இதுபற்றி இன்று CJI பி.ஆர்.கவாய் அமர்வில் கேள்வி எழுப்பப்பட்டதை அடுத்து, இந்த தகவல் வெளியாகியுள்ளது. 2024-க்குள் மாநில அந்தஸ்து தரவேண்டும் என மத்திய அரசை SC அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.