News June 4, 2024
மேற்கு வங்கத்தில் கடும் போட்டி

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 20 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. பாஜகவும் 20 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால், அங்கு கடுமை போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டும் முன்னிலையில் உள்ளது.
Similar News
News August 5, 2025
ஆபரேஷன் சிந்தூரை பாராட்டி NDA தீர்மானம்

இன்று நடந்த NDA கட்சிகள் கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர், ஆபரேஷன் மகாதேவ் ஆகியவற்றை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட இந்த நடவடிக்கைகளில், நம் பாதுகாப்புப் படையினர் வெளிப்படுத்திய வீரம், அர்ப்பணிப்பை பாராட்டியும், தீவிரவாதிகள் மீது சமரசமின்றி சரியான பதிலடி கொடுக்க உறுதியாக செயல்பட்ட PM மோடியையும் இத்தீர்மானம் பாராட்டியுள்ளது.
News August 5, 2025
BREAKING: ஆகஸ்ட் 14ல் அமைச்சரவை கூட்டம்

ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 14 அன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. பல்வேறு மக்கள் நல திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
News August 5, 2025
தனி நபர் எவ்வளவு நகைக் கடன் வாங்கலாம்?

தங்கம், வெள்ளி நகைக் கடன் வாங்குபவர்களுக்கு ரிசர்வ் வங்கி வரம்பு நிர்ணயித்துள்ளது. அதன்படி, ஒருவர் 1 கிலோ வரை தங்க நகைகள், 50 கிராம் வரை தங்க நாணயங்களை அடமானம் வைக்கலாம். இதேபோல், 10 கிலோ வரை வெள்ளி நகைகள், அரை கிலோ வரை வெள்ளி நாணயங்களை அடகு வைக்க முடியும். கடன் வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். மேலும், தங்கத்திற்கு அதன் மதிப்பில் 85% வரை கடன் வாங்க முடியும். SHARE IT.