News June 4, 2024
முன்னிலை: பெரும்பான்மையை கடந்தது பாஜக கூட்டணி

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இதுவரை வெளியான முன்னிலை நிலவரப்படி பாஜக கூட்டணி 290க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 210க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மத்தியில் ஆட்சியமைக்க 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 21, 2025
இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் செப்.27 வரை மழை பெய்யக்கூடும் என்று IMD கணித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தென்தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் கூறியுள்ளது. மேலும், காற்று வீசும் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
News September 21, 2025
ஆயுதபூஜை விடுமுறை.. நாளை முதல் ஸ்பெஷல் அறிவிப்பு

ஆயுதபூஜை, தீபாவளியையொட்டி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் – குமரி இடையே நாளை(செப்.22), 29, அக்.6, 13-லிலும், மறுமார்க்கத்தில் செப்.23, 30, அக்.7, 14, 21-லிலும் இயக்கப்படும். அதேபோல், நெல்லை – செங்கல்பட்டு இடையே, செப்.26, 28, அக்.3, 5, 10, 12, 17, 19, 24, 26-லிலும், மறுமார்க்கத்தில் செப்.26, 28, அக். 3, 5, 10, 12, 17, 19, 24, 26-லிலும் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. SHARE IT.
News September 21, 2025
கல்வியில் அரசியலை திணிக்க வேண்டாம்: தர்மேந்திர பிரதான்

தமிழக அரசு, தனது அரசியல் நிலைப்பட்டை மாணவர்களின் கல்வியின் மீது திணிக்கக்கூடாது என்று தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார். தமிழக பள்ளிகளில் ஏற்கெனவே தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன; வேறு மொழிகளை திணிக்கவில்லை என்றும், RTE விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.