News June 4, 2024

சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்

image

இந்திய பங்குச்சந்தைகள் இன்று தொடங்கியவுடனே 350 புள்ளிகளை இழந்து 22,910 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக அபார வெற்றி பெறும் என்று கூறப்பட்டதால் நேற்று நிஃப்டி 600 புள்ளிகள் உயர்ந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் காங்கிரஸ் கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகிப்பதால் சந்தைகள் சரியத் தொடங்கியுள்ளன.

Similar News

News August 5, 2025

GOOD BYE அம்மா.. உருக்கமான தற்கொலை கடிதம்

image

‘அன்புள்ள குடும்பத்தினரே, இதை படிக்கும்போது அழ வேண்டாம். நான் ஏற்கனவே சொர்க்கம் சென்றிருப்பேன். உங்கள் அனைவரையும் மிஸ் பண்ணுகிறேன். GOOD BYE அம்மா.’ படிக்கும்போதே கண்ணீர் வரவழைக்கும் இந்த வரிகள் 14 வயதேயான சிறுவனின் தற்கொலை கடிதத்தில் இருந்தவை. பெங்களூருவில் 7-வது படிக்கும் சிறுவன், தனது அம்மா வெளியூர் சென்ற நேரத்தில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளான். காரணம் குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.

News August 5, 2025

ஆக.9, 11-ம் தேதிகளில் விசிக ஆர்ப்பாட்டம்: திருமா

image

ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரி விசிக சார்பில் வரும் 9, 11-ம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். SC ஒரு வழக்கில் இக்கொலைகளை தடுக்க உரிய வழிமுறைகளை வலியுறுத்தி தீர்ப்பளித்தாகவும், ஆனால் அது நடைமுறைப்படுத்தவில்லை என்றார். மாநில அரசுகளுக்கு இச்சட்டத்தை இயற்ற அதிகாரமுள்ளதால் TN அரசு அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக இதனை இயற்ற கோரிக்கை விடுத்தார்.

News August 5, 2025

EX கவர்னர் காலமானார், CM ஸ்டாலின் இரங்கல்

image

ஜம்மு – காஷ்மீர், ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் கவர்னராக பணியாற்றிய சத்யபால் மாலிக் உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் அவரது உயிரிழப்பு மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிகாரத்துக்கு எதிராக உண்மையை பேச அவர் என்றுமே தயங்கியதில்லை என்றும், வரலாறு அவர் வகித்த பதவிகள் மட்டுமின்றி, அவர் எடுத்த நிலைப்பாடுகளையும் நினைவில் வைத்திருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!