News June 4, 2024
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி முன்னிலை

ஆந்திரா மக்களவைத் தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 3 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. பாஜக, ஜனசேனா உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி 18 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 1 தொகுதியில் மட்டும் முன்னிலையில் உள்ளது.
Similar News
News August 5, 2025
24 வயதில் ₹2200 கோடி சம்பளம்: மார்க் வியந்த இளைஞர்

AI நிபுணரான Matt Deitke என்ற இளைஞர், 4 ஆண்டுகளுக்கு பெறப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ₹2194 கோடி! AI சூப்பர் இன்டலிஜன்ஸ் நுட்பத்தில் ஆதிக்கம் செய்ய, அத்துறை நிபுணர்களுக்கு வலைவீசி வரும் மெட்டா நிறுவனம், Matt-க்கு ₹1097 கோடி சம்பளம் தர முன்வந்தபோது, அவர் ஏற்கவில்லை. பின் மெட்டா சிஇஓ மார்க் ஜூக்கர்பர்க் நேரில் சந்தித்து சமாதானம் செய்தபின், ₹2194 கோடி சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டாராம். திறமை!
News August 5, 2025
திமுகவினரின் முகத்திரையை கிழிப்போம்: குஷ்பு

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டி தங்களது திட்டம் போல் காட்டிக்கொள்வதாக குஷ்பு விமர்சித்துள்ளார். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை நடைபெறுகிறது. ஆனால் போலீஸை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஸ்டாலினிடம் எவ்வித பதிலும் இல்லை என்பதோடு அச்சம்பங்கள் மூடி மறைக்கப்படுகின்றன என்றார். மேலும் இவர்களின் முகத்திரையை கிழித்து மக்களிடம் அம்பலப்படுத்துவோம் எனவும் தெரிவித்தார்.
News August 5, 2025
SK-க்கு வில்லனாக நடிக்க அழைப்பு: லோகேஷ்

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தில் வில்லனாக நடிக்க தன்னை அணுகியதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தனக்கு அக்கதை பிடித்திருந்ததாகவும், SK-வும், தான் நடித்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். எனினும் கூலி படத்தில் பிஸியாக இருந்ததால் அதனை நிராகரித்ததாக தெரிவித்த லோகேஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.