News June 4, 2024
ஒடிஷா சட்டசபை தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை

ஒடிஷா சட்டசபை தேர்தலில் பாஜக 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. சற்றுமுன் கிடைத்த தகவலின் படி, ஆளும் கட்சியான ஜனதா தளம் ஒரு இடத்திலும், காங்., ஒரு தொகுதியிலும், பாஜக 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தல் முடிவுகளை WAY2NEWS செயலியில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
Similar News
News September 21, 2025
விபத்தில் சிக்கினார் நடிகர் ஜோஜு ஜார்ஜ்

பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜ் பயங்கர விபத்தில் சிக்கியுள்ளார். மூணாறு அருகே திரைப்பட படப்பிடிப்பின் போது, ஜீப் கவிழ்ந்த விபத்தில், படுகாயமடைந்த ஜோஜு ஜார்ஜுக்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக தனியார் ஹாஸ்பிடலில் அனுமதித்துள்ளனர். அவருடன் பயணித்த 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
News September 21, 2025
மோடிய சந்திச்சேன், ஆனா பேச முடியல: பிரகாஷ்ராஜ்

மோடி கட் அவுட்டுடன் தான் இருக்கும் போட்டோவை பிரகாஷ்ராஜ் X தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘ஏர்போர்ட்டில் அவரை சந்தித்தேன், ஆனால் பேச முடியவில்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளார். பாஜகவின் தீவிர எதிர்ப்பாளரான அவரின் இந்த பதிவு தற்போது வைரலாகிறது. முன்னதாக, H-1B விசா கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து, மோடி தனது நண்பர் டிரம்ப்பிடம் பேசி உரிய தீர்வை காண்பாரா என்றும் கேட்டிருந்தார்.
News September 21, 2025
வேறு உலகிற்கான நுழைவாயில் உண்மையா?

உலகம் முழுவதும் சில இடங்களில் வேறு உலகிற்கு செல்லும் இரகசிய நுழைவாயில்கள் உள்ளதாக நம்பப்படுகிறது. அந்த இடங்கள் குறித்து பல நூற்றாண்டுகளாக பல்வேறு கட்டுக்கதைகள் நிலவுகின்றன. அவை எந்த இடங்கள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதுகுறித்து உங்க கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க.