News June 4, 2024
திருச்சியில் துரை வைகோ முன்னிலை

திருச்சி மக்களவைத் தொகுதியின் வாக்குகள் எனப்படுகின்றன. வாக்கு என்னும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக தபால் வாக்குகள் அந்தந்த தொகுதி வாரியாக ஒரே அறையில் வைத்து எண்ணும் பணி துவங்கியுள்ளது. இந்த தபால் வாக்கு எண்ணிக்கையில் தற்போது மதிமுக வேட்பாளர் துரை வைகோ தொடர் முன்னணியில் உள்ளார். 2ஆம் இடத்தில் நாம் வேட்பாளர் உள்ளார்.
Similar News
News August 25, 2025
திருச்சி: ரேஷன் கடை பிரச்சனையா? இத பண்ணுங்க!

திருச்சி மாவட்ட மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களை வழங்கினால், பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் நடந்தால் இனி கவலை வேண்டாம். உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…
News August 25, 2025
திருச்சி: பெயர்க்காரணத்தைக் கூறும் கல்வெட்டு!

திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் ‘சிரா’ என்னும் பெயருடைய சமணத் துறவி தங்கியிருந்ததாக அக்குகையில் உள்ள 11-ம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. “சிரா” துறவியின் பள்ளி, சிராப்பள்ளி என்றாகியது என்றும்; 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் திரு-சிலா-பள்ளி (புனித-பாறை-ஊர்) எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அதிலிருந்தும் திருச்சிராப்பள்ளி என்ற பெயர் வந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.
News August 25, 2025
திருச்சி: மாணவர்களுக்கு இலக்கிய திறனறி தேர்வு அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளிலும் +1 பயிலும் மாணவ, மாணவிகளுக்கான “தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு” வரும் அக்.11 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பள்ளி தலைமையாசிரியரிடம் செப்.4-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா தெரிவித்துள்ளார்.