News June 4, 2024
அரசியல் கட்சி பிரதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளிலிருந்து 13 விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் வாக்கு எண்ணிக்கை பொதுபார்வையாளர் அகிலேஷ் குமார் மிஷ்ரா அவர்கள் மேற்பார்வையில் தொடைங்கியது.
Similar News
News July 6, 2025
விழுப்புரம்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜுலை.06) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
News July 6, 2025
பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் நலன் கருதி இத்திட்டத்தை அமல்படுத்த அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
News July 6, 2025
அரகண்டநல்லூர்: வழிபறியியல் ஈடுபட்ட வாலிபர் கைது

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அடுத்துள்ள, கீழ்க்கொண்டூர் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதியில் மது போதையில் இருந்த மூன்று இளைஞர்கள் அவ்வழியாக வந்த நபரிடம் 45 ஆயிரம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்துள்ளனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழரசன் என்ற நபரை இன்று(ஜூலை 6) கைது செய்து சிறையில் அடைத்தனர்.