News June 4, 2024
புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை

புதுச்சேரியில் உள்ள 2 வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரியில் இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவில்லை. நாடு முழுவதும் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை தொடங்காததால் அரசியல் கட்சிகளின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையங்களில் காத்திருக்கின்றனர்.
Similar News
News September 21, 2025
எனக்கு நோபல் பரிசு கொடுக்கனும்: டிரம்ப்

இந்தியா – பாக்., மோதலை வர்த்தகம் மூலம் தானே தீர்த்து வைத்ததாக மீண்டும் டிரம்ப் கூறியுள்ளார். அத்துடன், இதுவரை 7 போர்களை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக, தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், சமாதான ஒப்பந்தங்களை உருவாக்கி வருவதாகவும், போர்களை நிறுத்தி வருவதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கலாமா?
News September 21, 2025
மூலிகை: ஆண்மை விருத்திக்கு உதவும் தூதுவளை!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின் படி,
*நரம்பு தளர்ச்சி பாதிப்புடைய ஆண்கள், உணவில் தேவையான அளவு தூதுவளை சேர்த்து கொள்வதால், ஆண்மை குறைபாடு நீங்கும்.
*தூதுவளை இலையை பொடியாக்கி சாப்பிட்டு வந்தால், ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
*தூதுவளை ரசம் சாப்பிட்டு வந்தால், சளி, இருமல், மூக்கடைப்பு, மூச்சிரைப்பு போன்ற பிரச்னைகள் நீங்கும்.
இத்தகவலை நண்பர்களுக்கு பகிரவும்.
News September 21, 2025
BREAKING: தவெகவினர் ஏறிய மண்டப சுவர் இடிந்து விழுந்தது

நாகை புத்தூர் அண்ணா சிலை அருகே நேற்று விஜய் பரப்புரை மேற்கொண்டபோது, தவெகவினர் ஏறியதால், மாதா கோயில் மண்டப சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதுதொடர்பாக தவெகவினர் மீது போலீஸ் நடவடிக்கை பாய்ந்துள்ளது. அத்துமீறல், சொத்துக்களுக்கு சேதம், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நாகை தவெக மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.