News June 4, 2024

திமுக 7 இடங்களில் முன்னிலை

image

புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சற்றுமுன் தொடங்கியுள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் திமுக கூட்டணி 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக +, பாஜக +, நாதக ஆகிய கட்சிகள் இதுவரை எந்த இடத்திலும் முன்னிலை பெறவில்லை.

Similar News

News September 21, 2025

RECIPE: சத்தான குதிரைவாலி லட்டு!

image

ஜங்க் ஃபுட்ஸுக்கு பதிலாக, சிறுவர்களுக்கு சத்தான குதிரைவாலி லட்டு செய்து கொடுங்கள். அதை செய்ய, முதலில் குதிரைவாலி அரிசி & அவலை கடாயில் போட்டு, மிதமான தீயில் வறுக்கவும் *இவற்றுடன் நெய் சேர்த்து, சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் *இத்துடன் பொடித்த வெல்லம் & ஏலக்காய் தூள், பாதாம், முந்திரி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் *கைகளில் நெய் தடவி, இந்த கலவையை சிறு, சிறு லட்டுகளாக உருட்டவும். SHARE.

News September 21, 2025

ஒரு மாதம் பணிபுரிந்தாலும் பென்ஷன் பெறலாம்

image

EPF பென்ஷன் பெறுவதற்கு ஒருவர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது பணிபுரிந்திருக்க வேண்டும். ஆனால், ஒரு சில ஊழியர்களுக்கு EPFO விதிவிலக்கு அளிக்கிறது. இதன்படி, BPO, லாஜிஸ்டிக்ஸ் (அ) ஒப்பந்த முறையில் தற்காலிக வேலை செய்பவர்கள் ஒரு மாதம் பணிபுரிந்தாலே EPF பென்ஷன் பலன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், இதுபோன்ற வேலைகளில் பணிபுரிவோருக்கு EPF அக்கவுண்ட் பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

News September 21, 2025

இன்று மட்டன் சிக்கன் சாப்பிடக் கூடாது

image

புரட்டாசி மாத மகாளய அமாவாசை தினமான இன்று மதியம் 1 மணிக்குள் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பது, குலதெய்வத்தை வழிபடுவது முக்கியம். மகாளய அமாவாசை வழிபாட்டால் தலைமுறை தலைமுறையாக இருந்த அனைத்து தடைகளும் நீங்கும். இதனால் திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தொட்ட காரியங்கள் நிறைவேறும். எனவே, மிக முக்கிய தினமான இன்று அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!