News June 4, 2024
நீலகிரி தொகுதி யாருக்கு சாதகம்?

கோவை, திருப்பூர் உள்பட 4 மாவட்டங்களை உள்ளடக்கிய நீலகிரி தொகுதியில், ஆ.ராசா சிட்டிங் எம்.பியாக இருக்கிறார். திமுக சார்பில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எல்.முருகன், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வன் களம் கண்டனர். 8 முறை காங்., 3 முறை திமுக வென்ற இத்தொகுதியில் அதிமுக, பாஜக தலா 2 முறை வென்றுள்ளன. இத்தொகுதி, இம்முறையும் ஆ.ராசாவுக்கு சாதகமாகவே இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது.
Similar News
News December 1, 2025
தி.மலையில் பிரபல நடிகர்கள்-வைரலாகும் ஃபோட்டோ!

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில், தமிழ் திரையுலக நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன், சூர்யா, சிம்பு, தனுஷ், அஜித் குமார், விக்ரம் போன்றவர்கள் கலந்து கொண்டு அருணாச்சலேஸ்வரர் கோயிலை சுற்றி பார்த்து, சாமி தரிசனம் செய்வது போன்ற AI புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
News December 1, 2025
உடனடியாக நிவாரணம் வழங்க CM ஸ்டாலின் உத்தரவு

டிட்வா புயலால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் இடங்களில் நடைபெறும் பணிகளை தொடந்து கண்காணித்து வருதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அக்டோபர் மாதம் பெய்த மழையால் 33% மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, நிவாரணம் வழங்க ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம் 4,235 ஹெக்டேர் வேளாண் பயிர்கள், 345 ஹெக்டேர் தோட்ட கலை பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 1, 2025
தேர்தலுக்கான விருப்ப மனு வாங்க தொடங்கிய அமமுக

2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் அமமுக சார்பில் போட்டியிடுவோர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். டிச.10 முதல் 18-ம் தேதி வரை விருப்ப மனு பெறலாம் எனவும் கூறியுள்ளார். TN-ல் மனுவுக்கான கட்டணம் ₹10,000 ஆகவும், புதுச்சேரிக்கு ₹5,000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், மனுக்களை ஒப்படைக்க கடைசி நாள் ஜன.3-ம் தேதி எனவும் தினகரன் தெரிவித்துள்ளார்.


