News June 4, 2024
தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் பதிவான வாக்குகள் இன்னும் சற்று நேரத்தில் எண்ணப்பட உள்ளன. இதையொட்டி, மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முகவர்கள் செல்ஃபோன் கொண்டுவரக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.
Similar News
News December 2, 2025
டெல்லி விரைந்த OPS… புதுக்கட்சி தொடக்கமா?

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை இணைக்க EPS-க்கு 15-ம் தேதி வரை OPS கெடு விதித்திருந்தார். இதனிடையே அவர் தனிக்கட்சி தொடங்குவாரா அல்லது தவெகவுடன் இணைவாரா என்ற கேள்விகள் எழுந்தது. இந்நிலையில் டெல்லிக்கு இன்று OPS அவசர பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதுவரை பாஜக தலைவர்களை சந்திக்க அவர் நேரம் எதுவும் கேட்கவில்லை என தெரிகிறது. இதனால் அவர் புதிய கட்சியை பதிவு செய்யவே டெல்லி சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
News December 2, 2025
5 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் விடுமுறை

தொடர் மழை காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை(டிச.3) பள்ளிகளுக்கு விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, சென்னை, திருவள்ளூரில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும், பல மாவட்டங்களில் மழை தொடர்வதால், அங்கும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இதனிடையே, தி.மலை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதால், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படாது.
News December 2, 2025
CINEMA 360°: ‘வா வாத்தியார்’ ரிலீஸ் தேதி மாற்றம்

*மோகன் லாலின் ‘திரிஷ்யம் – 3’ படப்பிடிப்பு நிறைவடைந்தது. *கார்த்தியின் வா வாத்தியார் படம் வருகிற 5-ம் தேதி வெளியாக இருந்த நிலையில், அது டிச.12 தேதிக்கு தள்ளிப்போயுள்ளது. *விமல் நடித்துள்ள ‘மகாசேனா’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. *‘அங்கம்மாள்’ படத்தில் இருந்து ‘செண்டிப்பூவா’ பாடல் வெளியாகி உள்ளது.


