News June 3, 2024
நீட் வினாத்தாள் கசிவு: மீண்டும் தேர்வு நடத்த கோரிக்கை

நடப்பு ஆண்டில் நடத்தப்பட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை, மீண்டும் புதிதாக நடத்தக்கோரி மாணவர்கள் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர். கடந்த மே 5ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில், வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து மனு அளிக்கப்பட்டுள்ளது. 2024 இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள், ஜூன் 14ல் எதிர்பார்க்கப்படும் நிலையில் மாணவர்கள் வலியுறுத்தல்.
Similar News
News December 1, 2025
போட்டோவை காணிக்கையாக கேட்கும் அம்மன்!

பொங்கல் வைப்பது, முடி, பண காணிக்கை போன்றவற்றை காணிக்கையாக செலுத்தும் பல கோயில்கள் உள்ளன. ஆனால், வேலூர் ஆற்காடு அருகே உள்ள கலவை என்னும் கிராமத்தில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் முற்றிலும் மாறுபட்டதாகும். எந்த வேண்டுதல் ஆயினும் அது நிறைவேறிய பிறகு, தங்களது போட்டோவை காணிக்கையாக கோயிலில் மாட்டிவிட்டு செல்கின்றனர். அதே போல, இக்கோயிலில் பூசாரியும் இல்லை. அர்ச்சனை, அபிஷேகமும் நடப்பதில்லை.
News December 1, 2025
Cinema 360°: மீண்டும் லவ் அவதாரில் ரியோ

*ரஷ்மிகா மந்தனாவின் ‘The GirlFriend’ டிச.5-ம் தேதி நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. *ரியோ ராஜ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் காலை 11:11 மணிக்கு ரிலீசாகிறது. *பிரபுதேவாவின் ‘மூன்வாக்’ கோடை விருந்தாக வெளியாகும் என அறிவிப்பு. *சல்மான் கானின் அடுத்த படத்தை ‘வாரிசு’ இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கவுள்ளதாக தகவல். *கவினின் ‘மாஸ்க்’ ₹10 கோடி வசூலித்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News December 1, 2025
Sports 360°: கால்பந்தில் கலக்கும் இந்தியா

*U-17 ஆசிய கோப்பை கால்பந்து குவாலிஃபையர் போட்டியில் IND 2-1 என்ற கோல் கணக்கில் IRN-ஐ வீழ்த்தியது. *சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கியின் இறுதிப்போட்டியில் பெல்ஜியத்திடம் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி. *ITTF யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் திவ்யான்ஷி வெண்கலம் வென்றார். *சையத் மோடி பேட்மிண்டன், மகளிர் இரட்டையரில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த் & த்ரிஷா ஜோலி இணை சாம்பியன்.


