News June 3, 2024
இந்தியாவுக்கு சுற்றுலா செல்லுங்கள்: இஸ்ரேல்

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, இஸ்ரேலியர்கள் மாலத்தீவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய கடற்கரைகளில் இஸ்ரேலியர்கள் தங்கள் சுற்றுலா விடுமுறையை கழிக்குமாறு, இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும், இந்தியாவின் பிரசித்தி பெற்ற கடற்கரைகளான கோவா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு மற்றும் கேரளா உள்ளிட்டவற்றை தனது X பக்கத்தில் பரிந்துரைத்துள்ளது.
Similar News
News September 21, 2025
2034 வரை மோடி தான் PM வேட்பாளர்: ராஜ்நாத் சிங்

2034 வரை மோடி தான் பாஜகவின் PM வேட்பாளர் என அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 1980 முதல் மோடியுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், அவரைப் போன்ற மக்களிடம் நெருக்கமாக தொடர்பில் இருக்கும், பிரச்னைகளை எளிமையாக அணுகும் ஒரு தலைவனை இதுவரை பார்த்ததில்லை என்றும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேலும், சர்வதேச பிரச்னைகளுக்கு உலக நாடுகளின் தலைவர்களே PM மோடியுடன் ஆலோசனை கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News September 21, 2025
சாக்ரடீஸ் பொன்மொழிகள்

*ஆடம்பரம் என்பது போலியானது வறுமை, மனநிறைவு என்பது வற்றாத செல்வம். *பைத்தியக்காரனை நிச்சயம் திருத்தி விடலாம்; தற்பெருமை பேசுபவனை திருத்தவே முடியாது. *உனது அறிவையும் ஆற்றலையும் பகிராது விட்டால் அது உன்னை அழித்துவிடும். *பிறரது குறையை காண்பவன் அரை மனிதன், தனது குறையை காண்பவன் முழு மனிதன். *உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் அமையும். உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை அமையும்.
News September 21, 2025
ஊருக்கு போனவங்க உடனே வாங்க: கதறும் USA கம்பெனிகள்

H-1B, H-4 விசா கொண்டுள்ள ஊழியர்கள் சொந்த நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இருந்தால், உடனே அமெரிக்கா திரும்புமாறு அமேசான், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. மேலும், அமெரிக்காவில் இருப்பவர்கள் சர்வதேச பயணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டிரம்பின் புதிய அறிவிப்பின் படி, <<17767608>>H-1B<<>> விசா கொண்டிருப்பவர்கள், இன்று இரவு 12 மணிக்குள் அமெரிக்கா திரும்பாவிட்டால், ₹88 லட்சம் செலுத்த வேண்டும்.