News June 3, 2024
உங்கள் தொகுதி யாருக்கு?

2019 மக்களவைத் தேர்தல் தருமபுரி தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில்குமார் 70,753 (5.78%) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் ஆ. மணியும், அதிமுக சார்பில் அசோகனும், பாஜக கூட்டணியில் பாமக சார்பில் சவுமியா அன்புமணியும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? உங்கள் கருத்து என்ன?
Similar News
News August 21, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 21 ) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக R. குணவர்மன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதை ஷேர் செய்யவும்.
News August 21, 2025
தருமபுரி பெண் குழந்தைகளுக்கான மாநில விருது

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த, 13 முதல் 18 வயதுக்குட்பட்ட சாதனைப் புரிந்த பெண் குழந்தைகளிடமிருந்து 2025-26 ஆம் ஆண்டிற்கான மாநில அரசின் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தை தினத்தில் வழங்கப்படும் இவ்விருதிற்கு, நவம்பர் 30, 2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, தருமபுரி மாவட்ட சமூக நல அலுவலரை 04342-233088 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
News August 21, 2025
ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து நேற்று (ஆகஸ்ட் 20) 1,00,000 கன அடியாக இருந்தது. அது படிப்படியாக குறைந்து இன்று (ஆகஸ்ட் 21) காலை 8 மணி நிலவரப்படி 30,000 கன அடியாக சரிந்துள்ளது. நீர்வரத்து குறைந்தபோதிலும், சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் குளிக்கவும், பரிசல் பயணம் செய்யவும் நான்காவது நாளாக தடை நீடிக்கிறது.