News June 3, 2024
₹7,755 கோடி மதிப்பிலான ₹2,000 நோட்டுகள் திரும்பவில்லை

7,755 கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. மே 2024 கணக்கீடு படி, மொத்த 2,000 ரூபாய் தாள்களில் 97.82% நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றுள்ளது. வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் அல்லது மாற்றுவதற்கான கால அளவு முடிந்து 8 மாதங்களான நிலையில், ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது.
Similar News
News September 21, 2025
ராகுலின் குற்றச்சாட்டை விசாரிக்க சிறப்பு குழு

ராகுல் காந்தியின் வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள ஆலந்தா தொகுதியில் 5,994 பேரின் பெயர்களை தேர்தல் ஆணையம் சட்டவிரோதமாக நீக்கியதாகவும், இதுதொடர்பான ஆவணங்களையும் வழங்க மறுப்பதாகவும் ராகுல் குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், அனைத்து ஆவணங்களையும் வழங்கியதாக தேர்தல் ஆணையம் இக்குற்றச்சாட்டுக்களை மறுத்தது.
News September 21, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை. ▶குறள் எண்: 465 ▶குறள்: வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு. ▶பொருள்: முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும்.
News September 21, 2025
அமெரிக்கா உடன் ஒப்பந்தம் எட்டப்படுமா?

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை அமெரிக்கா செல்ல உள்ளார். கடந்த 16-ம் தேதி அமெரிக்க அதிகாரிகள் இந்தியா வந்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நாளை அமைச்சர் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தியாவில் விவசாயப் பொருள்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா விரும்பும் நிலையில், அதில் ஏற்கனவே இந்தியா தன்னிறைவை அடைந்துவிட்டதால், பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது.