News June 3, 2024
குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் பேருந்து நிலையம்

ராயக்கோட்டை பேருந்து நிலையம் கட்டி சுமார் 30 வருடங்களாகிறது. அது பராமரிப்பின்றி செயல்பட்டு வந்ததால் பேருந்து செல்லக்கூடிய தரை முழுவதும் சிமெண்ட் மற்றும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பேருந்து டயர்கள் விரைவில் பழுதாகும் நிலை ஏற்படுகிறது. அதோடு பயணிகளும் அச்சத்தோடு செல்கின்றனர். இதனை சீரமைக்க பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News August 24, 2025
கிருஷ்ணகிரியில் இன்று எருது விடும் திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மங்கம்மாபுரம் என்னும் சிங்கார கிராமத்தில் இன்று (ஆகஸ்ட் 24) எருது விடும் திருவிழா நடைபெற உள்ளது. இதில் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர்கள் கே .பி முனுசாமி மற்றும் கிருஷ்ணகிரியின் கிழக்கு மாவட்ட செயலாளரும், கிருஷ்ணகிரி கே . அசோக் குமார் போன்றோர் தலைமை வகித்து விழாவை தொடங்க உள்ளனர். இதில் 101 பரிசுகளுக்கு மேல் வழங்கப்பட உள்ளன.
News August 23, 2025
கிருஷ்ணகிரி மக்களே நோட் பண்ணிக்கோங்க

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 23.08.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க
News August 23, 2025
கிருஷ்ணகிரி விமான நிலையம் குறித்து புதிய UPDATE!

தமிழ்நாடு அரசு பேரிகை–பாகலூர் அருகே விமான நிலையம் அமைப்பதற்கான, இடத்தை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓசூரிலுருந்து பேரிகை 25 KM, பாகலூர் 12 KM தொலைவில் உள்ளது. அத்திப்பள்ளியில் இருந்து 19 KM தொலைவில் அமைந்துள்ள இப்பகுதியில் எவ்வளவு நிலம் தேவை என்பதற்கான ஆய்வு நடைபெறுகிறது. அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க