News June 3, 2024
வர்த்தகர்கள் கவனமாக இருங்கள்: நிபுணர்கள்

பாஜக 3ஆவது முறையாக ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில், பங்குச்சந்தை 3%க்கும் மேல் உயர்ந்து உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக இருப்பதால் வர்த்தகர்கள் கவனமாக இருக்க வேண்டுமென நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருந்தால், சந்தை சற்று ஏறலாம் என்றும், கணிப்புகள் தவறினால் சந்தை சரியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News December 3, 2025
BREAKING: ஓய்வை அறிவித்தார் மோஹித் சர்மா

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக மொத்தமாக 34 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 37 விக்கெட்களை எடுத்துள்ளார். CSK-வுக்கு நட்சத்திர வீரராக திகழ்ந்த மோஹித், IPL-ல் ஒட்டுமொத்தமாக 134 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவர் பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட அணிகளுக்கும் விளையாடியுள்ளார்.
News December 3, 2025
இந்த தண்ணீரில் தலைக்கு குளிக்காதீங்க..

குளிர்காலம் என்பதால் தலைக்கு வெந்நிரீல் குளிக்கிறீங்களா? இது உங்கள் தலைமுடிக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். மிகவும் சூடான நீரில் குளிப்பதால் முடியில் உள்ள Natural Oils நீக்கப்படுகின்றன. இதனால் முடி வறட்சி, முடி உதிர்வு ஏற்படுவதோடு, பொடுகு தொல்லை அதிகரிக்கும். எனவே இதற்கு பதிலாக மிதமான சூட்டில் இருக்கும் நீரில் தலைக்கு குளிக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். அனைவருக்கும் SHARE THIS.
News December 3, 2025
விஜய் பாஜக கூட்டணியில் இணைகிறாரா? புது அப்டேட்

செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததே, அக்கட்சியை NDA கூட்டணியில் இணைப்பதற்குதான் என திமுக தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜய், அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வானதி சீனிவாசனிடம் கேட்டபோது, யார் யாரை எப்போது சந்திக்க வேண்டும் என்பதில் டெல்லி தலைவர்கள் சரியாக இருப்பார்கள் என சூசகமாக பதிலளித்துள்ளார். NDA கூட்டணியில் தவெக இணையுமா?


