News June 3, 2024
பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாது

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என திருமாவளவன் கூறியுள்ளார். தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படும் நிலையில், தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றிபெறாது என்றார். மேலும், மத்தியில் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் INDIA கூட்டணி வெற்றிபெறும் என்றும், INDIA கூட்டணி வெற்றிக்கு திமுகவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக அமையும் என்றும் கூறினார்.
Similar News
News September 21, 2025
Cinema Roundup: சமையல் கலைஞராக விரும்பிய தனுஷ்

*ரியோ ராஜ் நடித்துள்ள ‘ஆண் பாவம் பொல்லாதது’ படம் அக்.31-ம் தேதி வெளியாகிறது. *வாழ்க்கையில் சமையல் கலைஞராக ஆசைப்பட்டதாக தனுஷ் தெரிவித்துள்ளார். *’காந்தாரா’ படத்தின் தமிழ் வெர்ஷன் டிரெய்லரை சிவகார்த்திகேயன் ரிலீஸ் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேன் நிகாமின் ‘பல்டி’ பட டிரெய்லர் செப்.21-ம் தேதி வெளியாகிறது. *மலையாள திரையுலகில் ‘எம்புரான்’ வசூல் சாதனையை ‘லோகா’ முறியடித்துள்ளது.
News September 21, 2025
நயன்தாராவுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வருது? சீமான்

விஜய்யை பார்க்க ஆட்கள் கூடுவார்கள், ஆனால் அவர் பேசுவதை கேட்க கூடமாட்டார்கள் என சீமான் தெரிவித்துள்ளார். 60 ஆண்டுகளாக கோட்பாடு கொண்ட ஒரு கட்சியை சினிமா கவர்ச்சியால் தகர்க்க முடியாது என்றும் வலுவான கொள்கை கோட்பாடு கொண்ட தமிழ் தேசியத்தால் மட்டுமே திராவிடத்தை வெல்ல முடியும் எனவும் அவர் கூறினார். மேலும், நயன்தாரா, வடிவேலு கூடாத கூட்டமா விஜய்க்கு கூடுகிறது என்றும் சீமான் கேள்வியெழுப்பினார்.
News September 20, 2025
ராசி பலன்கள் (21.09.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.