News June 3, 2024

மங்களநாதர் ஆலயத்தில் மத்திய அமைச்சர் வழிபாடு

image

குடவாசல் ஒன்றியம் திருச்சிறுகுடி கிராமத்தில் உள்ள மங்களநாதர் சூஷ்மபுரீஸ்வரர் ஆலயத்தில் மத்திய அமைச்சர் எல். முருகன் மற்றும் பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் நேற்று மாலை சாமி தரிசனம் செய்தனர். பாஜக திருவாரூர் மாவட்ட முன்னாள் தலைவர் கோட்டூர் ராகவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.

Similar News

News July 9, 2025

திருவாரூர்: ஆற்றில் மூழ்கிய கூலி தொழிலாளியின் உடல் மீட்பு

image

கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி முகமது ஹனிபா (56). இவர், நேற்று முன்தினம் பாய்க்காரத் தெரு பாலம் அருகில் உள்ள வெண்ணாற்றில் குளிப்பதற்காக இறங்கியபோது, ஆற்றில் அதிக அளவில் சென்ற தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மூழ்கி மாயமானார். இதனை அடுத்து கூத்தாநல்லூர் தீயணைப்பு படையினர் தகவல் அறிந்து, நேற்று முன்தினம் முதல் தேடும் பணியில் ஈடுபட்டு, நேற்று மாலை முகமது ஹனிபாவின் உடலை மீட்டனர்.

News July 9, 2025

திருவாரூர் மாவட்டத்தில் இன்றைய ரோந்து பணி காவலர்கள்

image

திருவாரூர் மாவட்டத்தில் ஜூலை 8 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை. இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல்துறையின் உடனடி உதவிக்கு எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News July 8, 2025

திருவாரூர்: 70% மானியத்தில் சோலார் பம்புசெட்

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில் 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. <>இதற்கு உழவன் App<<>> மூலமாக விண்ணப்பித்து, பெயரை முன்பதிவு செய்துக் கொள்ளலாம். மேலும் அறிய திருவாரூர் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை (04366 290536) அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!